முகப்பு நிறுவனரைப் பற்றி நூல்கள் அணுகவும்
 
   
  நூல்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தற்போது கிடைக்கும் வெளியீடுகளின் விலைப் பட்டியல்.
 
லைப்பு தள்ளுபடி விலை*
அகராதி/வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி - 5 தொகுதிகள்
Book Code: SSTC-001
கி.பி. 1600 வரையான(சில சொற்கள் கி.பி.1800 வரை) தமிழ் இலக்கியங்களில் உரையாசிரியர்களால் விளக்கப்பட்ட 70814 சொற்களுக்கு வரலாற்று முறைப்படி பொருள் காணும் வகையில் ஐந்து தொகுதிகளாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ள சிறந்ததொரு பாராட்டத் தகுந்த முயற்சியாகும். இச் சிறந்த முயற்சி பல்வேறு நூல்களிலிருந்து சொற்கள் தொகுக்கப் பெற்று, அதாவது ஒரு சொல் வரலாற்று முறையில் முதலில் எந்த நூலில் எப்பொருளில் தோன்றுகிறதோ அந்த நூல் முதற்கண் அளிக்கப்பெற்று, பின் வரும் இலக்கியங்களில் பொருளில் மாற்றம் ஏற்படும் போது அந்த வரிசையில் மேற்கோள்கள், நூற்பெயர், பகுதி, அடி எண் முதலிய குறிப்புகளோடு பதிப்பிக்கப் பெற்றுள்ளன.
2000.00

வைணவ உரைநடை வரலாற்று முறைத் தமிழ்ப் பேரகராதி - 3 தொகுதிகள்

Book Code: SSTC-002
கி.பி. 1800 வரையிலான வைணவ உரைநடை இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்ற 45315 வட மொழிச் சொற்களுக்குத் தமிழில் பொருள் காணும் வகையில் மூன்று தொகுதிகளைக் கொண்டது. இந்தத் தனித்தன்மை வாய்ந்த சிறப்பான நூல் மற்ற அகராதிகளிலிருந்து வேறுபட்டது. இதில் மணிப் பிரவாள நடையில் உள்ள வடமொழிச் சொற்களுக்கு உச்சரிப்புடன், அச் சொற்கள் பயன்படுத்தப் பட்ட இடம், மேற்கோள்கள், நூற்பெயர், பாடல், அதிகாரம், பாட்டு எண் முதலியன குறிக்கப் பெற்றுள்ளன.
1000.00

சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி நிகண்டுகள்

Book Code: SSTC-003
மிகப் பழைய இம் மூன்று நிகண்டுகளும் எளிய முறையில் புணர்ச்சிச் சொற்கள் சந்தி பிரிக்கப் பெற்று, சாதாரண அறிவுடையவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவை அறிஞர்களுக்குக் கிடைத்தற்கரிய செல்வம் போன்றதாகும். ஒவ்வொரு நூலுக்கும் தலைப்பு அகராதியும், விரிவான சொல் அகராதி அட்டவணையும் இணைக்கப் பெற்றுள்ளன
500.00

தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி - 2 தொகுதிகள்

Book Code: SSTC-004
கி.பி. 400 முதல் கி.பி.1800 வரையிலான தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும்7959 சொற்களின் அகராதி அட்டவணை, காலக் குறிப்பு, மேற்கோள் மற்றும் பிற குறிப்புக்களுடன் தரப் பெற்றுள்ளன.
500.00

திவாகரம், பிங்கலம், சூடாமணி அகராதி அட்டவணை

Book Code: SSTC-005
பல நிகண்டுகளில் இம் மூன்றுமே மிகப் பழைய சிறந்த விரிவான நிகண்டுகளாகக் கருதப்படுகின்றன. இம் மூன்று நிகண்டுகளில் காணப்படும் அனைத்துச் சொற்களுக்கும் பொருள்கள், வரும் இடங்கள், பொருள்களில் மாற்றம் மற்றும் நூல்களின் பெயர்கள் முதலியன தரப் பட்டுள்ளன.
250.00

பெருங்கதை

Book Code: SSTC-006
வடமொழியில் ப்ருகத் கதா எனப்படும் நூலைத் தழுவிக் கொங்குவேளிர் என்னும் ஜைனரால் இம் மிகப் பழைய இலக்கியம் இயற்றப் பெற்றது. இந் நூல் டாக்டர் உ. வே.சா. அவர்களால் முதன் முதலில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந் நூல் தற்போது சொற்களைப் பிரித்து எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.
250.00

வார்த்தாமாலை

Book Code: SSTC-008
பின்பழகிய பெருமாள் ஜீயரால் தொகுக்கப் பெற்ற வைணவ இலக்கியங்களுள் முக்கியமான ஒன்று. எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.
100.00

ஸ்ரீதேசிகப் பிரபந்தம் மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் அவதார ப்ரகாரம் - 2 தொகுதிகள்

Book Code: SSTC-009
வைணவ ஆசார்யரின் மிகச் சிறந்த இந் நூல் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் சொற்கள் பிரிக்கப் பெற்றுச் சிறப்பாகப் பதிக்கப் பெற்றுள்ளது. சிறு குறிப்புகளும் தரப் பெற்றுள்ளன.
75.00

கலம்பகக் கொத்து

Book Code: SSTC-0010
எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் சந்தி பிரிக்கப் பெற்றுச் சொற்கள் தனித் தனியாக விளங்கும் முறையில் திருக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்,திருஆமாத்தூர்க் கலம்பகம், அழகர் கலம்பகம் மற்றும் திருவாரூர்க் கலம்பகம் ஆகிய ஐந்து நூல்களின் தொகுப்பான பதிப்பு.
50.00
 
* அஞ்சல் செலவு கூடுதல்
  தேவையான நூல்களுக்கு விண்ணப்பப் படிவம்